பெண் தெய்வத்தை எழுந்தருளச் செய்தல் : இலங்கையில் பத்தினி – கண்ணகி வழிபாடு பெண் தெய்வமானவள் காற்று,மேகம், விண்ணிலிருந்து இறங்கி, இலங்கையின் வேதனைகளைத் தன் தெய்வீகக் கண்களினால் நோக்கினாள்1 பத்தினி-கண்ணகி வழிபாடானது இலங்கையில் இந்து-பௌத்த சமரசப் பண்பிற்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக விளங்குகிறது. இந்தப் பெண் தெய்வமானவள், சடங்குகள் வழிபாட்டு முறைகளால் இரு சமயத்தவரிடையேயும் பிரதேசங்களிடையேயும் வேறுபட்டிருப்பினும், தமிழ் இந்துக்களாலும் சிங்கள பௌத்தர்களாலும் அவள் போற்றப்பட்டு வருகிறாள். ஆயினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான இலங்கையருக்கு அவள் ஒரு பொதுவான தெய்வம்… Continue reading Intro-ta
Category: Uncategorized @ta
History
வரலாறு சமஸ்கிருதத்தில் ‘ நம்பிக்கைக்குரிய,கற்புடைய மனைவி’ எனப் பொருள்படும் பத்தினியானவள், கண்ணகி/கண்ணகை அம்மன் என்றும்அழைக்கப்படுகிறாள்; தென் இந்திய காப்பியமான சிலப்பதிகாரத்தின் (சிலம்பின் கதை) முக்கிய கதாபாத்திரமான இந்த தைரியமுடைய தாய், இலங்கைவாழ் இந்துக்களால், பிரதானமாக இந்த தீவின் கிழக்கு, வடக்குப் பிரதேசங்களில் வாழ்பவர்களால் அவளது மூல உருவில் வழிபடப்பட்டு வருகிறாள். இப் பகுதிகளில் வாழும் பக்தர்கள் அரசியின் சிலம்பினைக் களவெடுத்தான் என வீண் பழி சுமத்தப்பட்டு; தன் கணவன் கொலை செயப்பட்டதற்கு பழிவாங்கும் முறையில் மதுரையை அழித்த… Continue reading History