History

Kannaki-Pattini-66


பிற்காலத்தில்  தேசியவாதிகள், சமயச் சீர்திருத்தவாதிகள் /புத்தெழுச்சி ஏற்படுத்தியோரான ஆறுமுக நாவலர், அநகாரிக்க தர்மபால போன்றோர் சிறப்புக்குன்றிய, ஆகம விதிக்குப் புறம்பான (சமஸ்கிருதம்/பிராமணியம்  அல்லாத) கண்ணகி-பத்தினி தெய்வ வழிபாடானது தடுக்கப்படவேண்டும் என விரும்பினர். இது இந்து சமயத்தினதும், பௌத்த மதத்தினதும் புனிதத்தை மாசுபடுத்துகின்றதென அவர்கள்  நம்பினார். நாவலர், அவளை  சமணசமய வியாபாரி எனப் பெயர் சூட்டிக்  கண்டித்து – “சமண சமய செட்டிச்சி”(மேற்கோள் ரகுபதி 1987), வடக்கில் அவளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட பல கோயில்களை துர்க்கை, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பராசக்தி கோயில்களென பெயர்மாற்றம் செய்ய முன்னின்று; அவற்றின் கட்டமைப்பு, சமய சடங்குகளை ஆகம விதிப்படி (சம்ஸ்கிருத) மேற்க்கொள்ளுமாறும் செய்தார். போரினால் சிதிலமடைந்த அல்லது அழிந்த வன்னியில் உள்ள  பல கண்ணகி அம்மன் கோயில்கள்  ஆகம விதிப்படி மீளக் கட்டிஎழுப்பும் நோக்குடன் சமீப காலங்களில்  கும்பபிஷேகத்தினை அறிவிக்க தமிழ் பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரங்களைச் செய்துள்ளன. பக்தர்களும் புலம்பெயர்ந்தோரும் (அனேகமாக இவர்களே புதுப்பித்தலுக்கான செலவினைமேற்கொள்வோர்) தமது (முன்னைய) ஊர் கோயிலின்  பிரதான விழாக்களின் சமயச் சடங்குகளை உடனுக்குடன் பார்க்கும் வண்ணம் இணையத்தில் காணொளிகளைத் தருகின்றனர் : http://www.youtube.com/watch?v=aZcfA_dRrVs.

பிரதானமாக வடக்கிலும் கிழக்கிலும்,கண்ணகி அம்மன் வழிபாடு எதிர்கொண்ட மிகப் பெரிய சூறாவளி எனக் கருதக் கூடியது  மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தமாகும். இது பக்தர்களையும், சமயச் சடங்குகளை மேற்க்கொள்வோரையும் மன அதிர்ச்சிக்கு உள்ளாக்கி,  ஊனமுறச்செய்து , கொன்று;  வணக்கத் தலங்களை சிதைத்து அல்லது அழித்தது. (மனித உரிமைகள் தமிழ் மையத்தில்  இக் கோயில்களின் பட்டியலைப் பார்க்கவும்: . http://www.tchr.net/religion_temples.htm)

முன்னேறி வரும் படைகள், குண்டுத்தாக்குதல் என்பவற்றில் இருந்து தப்பவும், உயர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடங்களை விட்டு அகலவும்; மக்களால் கண்ணகி கோயில்கள் கைவிடப்பட்டன. அவர்கள் தம்மிடையே நடைபெற்ற வன்புணர்ச்சிகளால் தூய்மை இழந்து, தம்மை அவள் கைவிட்டாள் என்ற எண்ணியவர்களால் ஒதுக்கப்பட்டனர். அவள் கோயிலில் வருடாந்தம் நடக்கும் திருவிழாக்கள் இராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தும் நிகழ்ச்சிகளாயின. ஆயினும் இடம்பெயர்ந்தோருக்கும், சித்திரவதை செய்யப்பட்டோருக்கும், வேதனையில் பைத்தியமாக்கப்பட்டோருக்கும், எல்லாமே பிழைத்த பின் தெய்வத்தின் தலையீடே துணைநிற்க வேண்டும் என நாடியோருக்கும் புகலிடமாக அவளது கோயில்கள் அமைந்தன.


மேற்கோள் நூல்கள்

குணசேகர, B (ed). 1900. ராஜவாளிய, கொழும்பு: அரச பதிப்பகம்.

குணசோம, குணசேகர. 1996. அன் கேலிய: பணம் பட்டுவ அசுரேன். கொட்டாவ: சாரா பதிப்பகம்.

ஐவர் ஆர். டபிள்யு. 1899. வடமத்திய மாகாணக் கையேடு, கொழும்பு: அரச பதிப்பகம்.

நோக்ஸ்,ராபர்ட். 1681.  கிழக்கிந்திய தீவுகளில் இலங்கையின் வரலாற்றுத்   தொடர்பு. இலண்டன் : சிஸ்வெல

கிருஷ்ணராஜா,எஸ். 2004. ‘ஈழத்து அம்மன் ஆலயங்கள், ஒரு வரலாற்றுப் பார்வை’

தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலயம் கும்பாபிஷேகம் மலர். கோண்டாவில், யாழ்ப்பாணம்.

ஒபயசேகர, கணநாத். 1978 ‘கஜபாகுவும் கஜபாகு காலத்துக்குரிய நிகழ்வுகளும் : புராணக்கதைக்கும் சரித்திரத்திற்குமான தொடர்பின்  விசாரணை’ இலங்கையில் சமயங்களிலும் அதிகாரத்திலும் சட்டபூர்வம், ed., பார்டுவெல் ஸ்மித். சம்பேர்க், PA: அனிமா நூல்கள்.

—————————— 1984. பத்தினி வழிபாட்டு மரபு. சிக்காகோ: சிக்காகோ பல்கலைக்கழக பதிப்பகம்.

பார்த்தசாரதி,ஆர்.(மொழிபெயர்ப்பு) 1993. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம். நியூ யார்க்: கொலம்பிய பல்கலைக்கழக பதிப்பகம

ரகுபதி,பொன்னம்பலம். 1987.  யாழ்ப்பாணத்தில் புராதன குடியேற்றங்கள், மதராஸ்: தில்லிமலர் ரகுபதி.

இராசநாயகம், முதலியார் சி. 1926. புராதன யாழ்ப்பாணம். மதராஸ்: எவ்ரிமான்ஸ் பதிப்பக நிறுவனம். Ltd.

சற்குணம், எம். 1976. ‘ஈழத்தில் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்’

திருக்கேதீஸ்வரம் திருக்குடமுழுக்கு திருமஞ்சன மலர். திருக்கேதீஸ்வரம்: திருக்கேதீஸ்வரம் ஆலய திருப்பணி சபை.

செனவிரத்ன, அனுராத. 2003. அனுஸ்ம்ர்தி:சிங்கள கலாசாரமும் நாகரிகமும் பற்றிய சிந்தனைகள். தொகுதி 1. வெல்லம்பிடிய: கொடகே

சிற்றம்பலம், சி.கே.2004. சிலம்பு பதிவு செய்துள்ள அம்மன் வளியாடு’ தில்லையம்பதி  ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலயம் கும்பாபிஷேகம். கோண்டாவில், யாழ்ப்பாணம்.

சிவசுப்ரமணியம் .2003. ‘மட்டக்களப்பில்  கண்ணகி வழிபாட்டு பாரம்பரியம்.’ இரண்டாவது சர்வதேச இந்துசமய மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. கொழும்பு,இலங்கை.

சுகுமார், பாலா. 2009. ஈழத்தில் கண்ணகி கலாச்சாரம். சென்னை:  தமிழ் கல்விக்கான சர்வதேச நிலையம்.

வார்ரெல், லிண்டி. (1990).  அண்டத் தொடுவானும் சமூகக் குரல்களும் (கலாநிதி பட்டப் படிப்பின்ஆய்வுரைக்காக சமர்ப்பிக்கப்பட்டது, மானுடவியற்துறை, அடிலேய்டே பல்கலைக்கழகம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *