பங்குனித் திங்கள
பங்குனித் திங்கள் அல்லது ‘மார்ச் மாதத்து திங்கட் கிழமைகள்’ வடக்கு குடாநாட்டுப் பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் கோவில்களில் புனித நாட்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. திங்கள் என்பது பங்குனி மாதத்தையும் குறிக்கிறது. இந்து நாட்காட்டியில் பங்குனி மாதம் என்பது மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து ஏப்ரல் மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியாகும். பங்குனி மாதமானது ஏப்ரல் 12க்கும் 15க்கும் இடையில் கொண்டாடப்படும் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பிற்கு முன்னர் முடிவடைகிறது.
பங்குனித் திங்கள் நாட்கள் கண்ணகி அம்மன் கோவில்களில் மட்டுமன்றி வடக்கில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதனை கொக்குவில், நந்தாவிலில் அமைந்துள்ள கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவிலில் இந் நாள் கடைப்பிடிக்கப்படும் முறைபற்றிய சுவாராஸ்யமான குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன: http://tamilweek.com/news-features/archives/267.
கண்ணகி அம்மன், துர்க்கை அம்மன், காளி அம்மன், மாரியம்மன், பேச்சி அம்மன், ஆத்தாள் அம்மன், கற்புலத்து அம்மன் என அழைக்கைப்பட்டாலும் அனைத்து அம்மனும், சக்தி அல்லது பெண் தெய்வத்தின் அவதாராமும் சிவபெருமானின் துணைவியுமாகிய பார்வதியே என வடக்கில் உள்ள பெரும்பாலான பக்தர்கள் நம்புகின்றனர். ஆதலால் ஒரு அம்மன் கோவிலில் வணங்குவதும் வேறு ஒன்றில் வணங்குவதும் ஒன்றே.
ஆயினும், பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் வந்திருந்த கண்ணகி அம்மன் பக்தர்கள் குழு ஒன்று “ஒவ்வொரு அம்மனும் தனக்கென சிறப்பான கதைகளைக் கொண்டுள்ளாள். கண்ணகி அம்மனின் கதையானது புகழ்பெற்ற தமிழ் இலக்கியத்தின் மணிபோன்ற கதையுடன் தொடர்புடையது [சிலப்பதிகாரம் பற்றிய எமது புகைப்படக்கட்டுரையினைப் பார்க்கவும்]. அவள் கற்பு (chastity or faithfulness), விடாமுயற்சி (perseverance), நீதி (justice) என்பவற்றின் வடிவம். இது அவளை எனையோரிடமிருந்து[அம்மன்கள்] வேறுபடுத்தி காட்டுகிறது…இந்த பண்பினையே போர் நடைபெற்ற காலங்கள் முழுவதும் நாங்கள் கடைப்பிடித்ததுடன் எமக்கு நம்பிக்கையையும் (hope) தந்தது” என சிறிது கடுமையாகவே குறிப்பிட்டனர்.