_MG_1414

பத்தினி மனியோ அல்லது தாய் வழிபாடானது இலங்கையில் கி.பி.2 ஆம் நூற்றாண்டு காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது  என்பது இலங்கைவாழ் பௌத்தர்களின் பிரபல நம்பிக்கையாகும். அவர்கள் ராஜவாளிய(17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படும்) எனும் அரசாட்சி பற்றிய சரித்திர நூலைப் பல சந்தர்ப்பங்களில் மேற்கோள் காட்டுகின்றனர். அதில் கஜபாகு மன்னன் 12,000 இலங்கை கைதிகளை  சோழ அரசிடமிருந்து (தற்போதைய தமிழ் நாடு) காப்பாற்றிய போது (மேலும்  12,000  சோழ கைதிகளையும்  சிறைப்பிடித்து) “அவன் கண்ணகி தெய்வத்தின் இரத்தின சிலம்புகளையும், நான்காவது கோவில் கடவுளரின் முத்திரைகளையும், வலகம மன்னனின் காலத்தில் (1900:48) கொண்டு செல்லப்பட்ட பிச்சைப் பாத்திரத்தையும்  கைப்பற்றினான்” என குறிப்பிடுகிறது.

சில பக்தர்களும், சமயச்சடங்கு முறைகளைக் கைக்கொள்வோரும் இந்த நிகழ்வினை  சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுடன் ஒருங்கிணைத்து கஜபாகு மன்னன் தனது தலைநகரில் கோயில் அமைத்து, சிலம்பினை அங்கு வைத்தான் என கருதுகின்றனர். இவனே பத்தினியை போற்றுதற்காக, தலை நகரை சுற்றி சிலம்பை ஊர்வலமாக கொண்டு செல்லும் முதல் பேரஹர நிகழ்வினை ஆரம்பித்தான் என போற்றப்படுகிறான்.  சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந் நிகழ்வானது  இன்றும் காணப்படும், இத் தொடர்பு பற்றிய மிக பழமையான தலையங்க விளக்கக் குறிப்பு என கருதப்படுகிறது. “ இலங்கையின் கஜபாகு …….. பலி பீடத்துடன் கூடிய கோயிலை அமைத்து, அங்கு தினமும் காணிக்கைகளை செலுத்தினான்.  ‘அவள்  இன்னல் தீர்த்து வரங்கள்  அளிப்பாள்’ என எண்ணி ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறும் முறையை ஏற்படுத்தினான். அதன் பிறகு மழை விடாது பெய்தது: பயிர்ச்செய்கை பிழைக்கவில்லை, நாடும் வளம் கொழிக்கும் இடமாக மாறியது” (பார்த்தசாரதி 1993: 278; இராசநாயகம் 1984: 73 ஐயும் பார்க்க)

asdஅனைத்து பத்தினி கோவில்களிலும், கண்டியிலுள்ள புனித தந்தத்துக்கான கோவிலிலும் நடைபெறும் நீர் வெட்டு விழாவானது, (பெரும்பாலும் வருடாந்த பெரஹரவின் பின்னர்)  கஜபாகு மன்னனின் சோழ இராச்சிய பயணத்தை நினைவுகூரும் நிகழ்வு என  தொடர்புபடுத்தி ஒரு சிலச் சமயச்சடங்கு முறைகளைக் கைக்கொள்வோரும் கூறுகின்றனர். அவன் இரும்பு அரச கோலால் சமுத்திரத்தைப் பிளந்து, சோழ அரசை நோக்கி நடந்து சென்றான். இந் நிகழ்ச்சி சிலவேளைகளில் கம்மாடுவா (கிராம மன்றம்) விழாக்களிள் நடைபெறுவதுடன் கஜபாகு கதாவ எனும் நூலிலும்  விபரிக்கப்பட்டுள்ளது. ( ஒபயசேகர 1978)