பிரதேசவாரியான வேறுபாடுகள், பக்தர்கள், நடைமுறை வழக்கங்களின்மறுபட்டவகைகள் என்பன பற்றிய உணர்வினைப் பெறுவதற்காக நாம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பத்தினி, கண்ணகி கோயில்களுக்கு சென்று, ஒவ்வொரு தலத்திலும் பல நாட்கள் தங்கிப் புகைப்படம் எடுத்தும் பக்தர்கள் ,சடங்குமுறைகளைச் செய்வோருடன் கலந்துரையாடியுமுள்ளோம். பெரும்பாலான எமது புகைப்படத்துடன் வெளிவந்துள்ள கட்டுரைகளில் வெளிக்காட்டபட்டுள்ள இப் பயணங்களை பெண் தெய்வத்தின் முக்கியமான திருவிழாக்கள் சடங்குமுறைகள் இடம்பெறும் காலங்களிலேயே மேற்கொண்டிருந்தோம். இத்தலைப்பு பற்றி ஆராயும் போது நாம் பலமுறை பத்தினி அல்லது கண்ணகி வழிபாடு பற்றிய பக்தர்களால் மேலேற்றம் செய்யப்பட்ட பன்னலம் செறிந்த இணையத்தளங்கள், வலைப் பதிவுகள், காணொளிகள் என்பவற்றையும் கண்ணுற்றோம். நாம் அவற்றில் சில தளங்கள், காணொளிகளின் தொடர்புகளை இங்கே தந்துள்ளோம்.
இவ் இணையத்தளமும் நாட்டின் பல பாகங்களுக்கும் செல்லவுள்ள புகைப்படக் கண்காட்சியும் கலாசாரமும் அபிவிருத்திக்குமான பிரின்ஸ் கிளாஸ் நிதியத்தின் பொருளாதார அனுசரணையின்றி சாத்தியமாகி இருக்காது. http://www.princeclausfund.org/. எனவே அவர்களுக்கு எம் நன்றிகள்! மெட்ரோபோளிடன் ஆபீஸ் தனியார் நிறுவனம், கனொன் ஆகிய நிறுவனங்களுக்கும் எமக்களித்த நீடித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.அத்துடன் ஸ்ரீலால் பெரேரா , தாமோதரம்பிள்ளை சனாதனன், பாக்கியநாதன் அகிலன் ஆகியோருக்கு ஆரம்பத்திலிருந்தே ஆய்வுகள், புகைப்பட ஆவணமாக்கலிற்கு அவர்கள் தந்த உற்சாகமான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
இதைத்தவிர பல வருடகாலமாக எமக்கு கருத்துக்கள் தெரிவித்தும், மொழிபெயர்ப்பில் உதவியும், கட்டுரைகள் கண்டுபிடித்து, சடங்குமுறைகள் பற்றிய தகவல்களைத் தந்து, நிபுணர்களுடனான தொடர்பினை ஏற்படுத்தித் தந்து, உபசரித்து, நாட்டின் மூலைமுடுக்கு எங்கும் வாகனம் செலுத்தி கொண்டு சென்ற இங்கே குறிப்பிட முடியாதளவான எண்ணற்றோர் எமக்கு உதவியுள்ளனர். ஆயினும் நிரந்தரமாக இருந்த புகைப்படக்கருவிகளைப் பொருட்படுத்தாது, பொறுமையாக எமது கேள்விகளுக்கு பதிலளித்து, தாராளமாக தமது அறிவு,கதைகள்,அனுபவம் என்பவற்றை எம்முடன் பகிர்ந்த கண்ணகி-பத்தினி பக்தர்களுக்கும் சமய வழக்கங்களைப் பின்பற்றுவோருக்கும் மிகப்பெரிய கடமைப்பட்டுள்ளோம். இவ் இணையத்தளம் அவர்களுக்கு சர்ப்பணம்.
சார்னி ஜெயவர்தன (புகைப்படவியலாளர்) & மாலதி டி அல்விஸ்(சமூக கலாசார மனித இன நூலர்)