Next
பங்குனித் திங்கள
வடக்கு குடாநாட்டில் பங்குனி மாதமானது வருடத்தின் மிக வெப்பமான காலப்பகுதியாதலால் சிறப்பு மிகு இந் நான்கு திங்கட் கிழமை நாட்களின் பிரதான நோக்கமே குளிர்ச்சியூட்டும் உணவுகளான அரிசிக்கஞ்சி (rice congee) அல்லது பால் கஞ்சி (milk congee), பொங்கல், மற்றும் பிற இன்சுவை பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து அவளை சாந்தப்படுத்துவதாகும். களவாவோடையில் உள்ள கண்ணகி அம்மன் கோவிலில் பெண்கள் பலர் அதிகாலை ஒன்றுகூடி அம்மன் சன்னதிக்கு நேராக கோவில் முற்றத்தில் பொங்கல் பொங்குவர்.
பொங்கல் எனப்படும் தமிழ் சொல்லானது ‘பொங்குதல்’ அல்லது ‘நிறைந்து வழிதல்’ எனப் பொருள்படுவதனால் இந்த சடங்கினைச் செய்வோருக்கு செல்வத்தையும் செழிப்பையும் அது நல்கும்.
பொங்கல் எனப்படுவது பங்குனித் திங்களில் சமைக்கப்பட்டு உண்ணப்படும் இன்சுவைச் சாதமாகும். அரிசி,தேங்காய்ப்பாலுடன் பயற்றம் பருப்பு,சர்க்கரை, ஏலக்காய், கராம்பு, உலர்ந்த திராட்சை, முந்திரிப் பருப்பு என்பனவும் பொங்கலில் சேர்க்கப்படும்,
சம்பிரதாயமாக முதல் மூன்று கைப்பிடி சிவத்த பச்சை அரிசியும் கொதிக்கும் நீரில் கணவனால் போடப்படும்.
திறந்த அடுப்பில் உள்ள பானையில் மனைவி தொடர்ந்து கிளறிக்கொண்டு இருக்கும் கடின வேலையைச் செய்வார்.
சோறு சரியான பதத்தினை அடைந்ததும் கற்கண்டுக் கட்டி அதனுடன் சேர்க்கப்படும்.
தேங்காய்ச் சிரட்டையிலான அகப்பையினால் அது சோறுடன் கலக்கும்படி நன்கு கிளறப்படும்.
அதன் பின்னர் பொதுவாக தென்னம் (Cocos nucifera) பூவிலிருந்து அல்லது பனம்(Borassus flabellifer) பூவிலிருந்து உருவாக்கப்படும் கருப்பட்டி,அல்லது பனங்கட்டித் துண்டுகள் சேர்க்கப்படும். சிலசமயங்களில் சர்க்கரை பாவிக்கப்படும்.
சர்க்கரையானது, அது சோறுடன் சேர்ந்து கரையும் வரை கிளறப்படும்.
முன்னர் பெரிய மண் பானைகளில் பொங்கலை சமைத்த பெண்கள் தற்போது அலுமினியப் பானைகளில் பொங்கினாலும், அதனை வாழை இலையிலேயே தொடர்ந்தும் பரிமாறி வருகின்றனர். கண்ணகி அம்மனுக்கு பொங்கலில் ஒரு பங்கினை படைத்த பின் மிகுதியை வீட்டுக்கு எடுத்துச் சென்று குடும்பத்தினருடனும், அயலவருடனும் பகிர்ந்துண்பர்.
மட்டுவிலில் உள்ள புகழ்பெற்ற பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் கோவிலில் பங்குனித் திங்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. (இக் கோவிலுக்கான பெயர் வரக் காரணமான புராணக்கதையை அறிய எமது கோவில்களும் தேவாலேக்களும் என்ற கட்டுரையைப் பார்க்கவும்- Kovils & Devales).
கோயில் வளவு துருவும், கல்லரிக்கும், வெட்டும், கிளறும், அவிக்கும், பொரிக்கும் வேலைகளுடன் இடையிடையே தமது விடையங்களைப் பரிமாறிக்கொள்ளும் பெண்கள் கூட்டத்தினரின் இரைச்சலுடன் இணைந்து காணப்படும்.
பங்குனித் திங்கள் அன்று கோவில் வளாகத்தில் தயார் செய்து பரிமாறப்படும் எல்லோராலும் விரும்பப்படும் பலகாரம் மோதகம் ஆகும். மோதகம் கணேசப்பெருமானுக்கு (பிள்ளையார் அல்லது விநாயகர் எனவும் அழைக்கப்படுவார்) மிக விருப்பமான உணவாகும். இந்த சுவை உணவினை உள்ளங்கையில் ஏந்தி இருக்கும் பல விநாயகர் உருக்கள் உள்ளன. இந்தியாவின் மேற்கு, தெற்கு பகுதிகளில் கணேசப்பெருமானுடைய பிறப்பு,அவதார நாட்களை கொண்டாடும் – விநாயகர் சதுர்த்தி (கணேசப் பெருமானுடைய திருநாள்) – ஆகஸ்ட்/செப்டெம்பரிலும் இந்தப் பலகாரம் செய்யப்படும். இங்கே பாவிக்கப்படும் பொருட்களும் செய்யும் உருவும் இலங்கையில் செய்யப்படுபவற்றில் இருந்து சற்று மாறுபட்டவை என்பதனை இங்கே காணலாம்: http://www.sharmispassions.com/2010/09/mothagam-pooranam-kozhukattai-for.html
முதலில், இரை அல்லது மோதகத்தினுள் வைக்கும் பூரணம் செய்யப்படும். பயற்றம் பருப்பு அவிக்கப்பட்டு, தேங்காய் துருவப்பட்டு, சர்க்கரை துண்டு துண்டாக வெட்டப்படும். (jaggery)
இரையின் தனித்துவமான, செழிப்பான நிறத்திற்கு காரணம் இந்த சர்க்கரை தான்.
சம அளவான அரிசி மாவும் கோதுமை மாவும் கலந்து நீர் சேர்த்து குழைத்து மா உருண்டைகள் செய்யப்படும். இவ் உருண்டைகள் பள்ளம் உடைய கோப்பைகள் போன்று தட்டப்படும்.
இந்த மாக்குழையல் கோப்பைகளுள் பூரணத்தை நிரப்பும் தருணம் இது.
ஒவ்வொன்றும் நிரம்பும் அளவு பூரணம் (இரை) வைக்கப்படும்.
அதன் பின்னர் அந்த கிண்ணத் தட்டின் வாய்ப்பகுதி அந்த மாவினாலேயே மெதுவாக மூடப்படும்.
இது பனாமாவில் பார்த்தது போலவே தனித்துவமான மாதுளம் பழ உரு போன்று பிடிக்கப்படும் (Punica granatum) (கொம்பு விளையாட்டு பற்றிய புகைப்பட கட்டுரையினைப் பார்க்கவும்). அவை பின்னர் அவிக்கப்பட்டு அல்லது பொரிக்கப்பட்டு உண்பதற்கு தயாராகும்!
இத் தினத்தில் சில கார சிற்றுண்டி வகைகளும் செய்து உண்ணப்படும். பொரிக்கும் தாச்சியிலிருந்து சுடச் சுட பரிமாறப்படும் மொறுமொறுப்பான உளுந்து வடை தனிச் சுவை யுடையது. இந்த பருத்த உருவுடைய சுவை உணவு அரைத்த உளுத்தம் மாக்கலவையுடன்(தோல் நீக்கிய உளுந்து) தாளித்த வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து செய்யப்படும். வடையினுள் உருவாகும் நீராவி வடையின் அதிக எண்ணெய்த்தன்மையை நீக்கி அதனை மொறுமொறுப்பாக்குகிறது.
பக்தர்களின் சுவை அரும்புகளை தூண்டும் வகையில் பல விற்பனையாளர் தற்காலிக கடைகளை அமைப்பர்.
இந்த விவேகமுடைய பெண்மணி குடையைப் பயன்படுத்துவதனூடாக புத்தாக்கஞ் செய்கிறார்.
பெரியவர் போன்றே சிறியவரும் வேர்க்கடலையும் சோளப் பொரியையும் விரும்புவர்.
பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் கோயிலானது கர்ப்பக்கிரகத்தில் பிராமணர்(ஐயர்) மாத்திரமே பூசைகள் மேற்கொள்ளும் ஆகம முறைப்படி(கோயில் அமைப்பு மற்றும் பூசை முறைகள் என்பவை பற்றிய சமஸ்கிருத மொழியில் உள்ள சமய நூல்கள்) அமைக்கப்பட்ட கோயில் ஆதலால் கோயிலின் உள்ளே நாம் புகைப்படங்கள் எடுக்கத் தடை செய்யப்பட்டது. ஆயினும் எமது நல்ல காலமாக மதிய பூசை (சடங்கு) முடிவடைந்ததும், வசந்த மண்டபத்திலிருந்த (உலாவாக கொண்டு செல்லப்படும் கோவில் சிலைகள் இங்கு காட்சிப்படுத்தப்படும்) கண்ணகி அம்மன் சிலை கோவில் வீதியில் உலாவாக கொண்டு வரப்பட்டது.
கண்ணகி அம்மனின் வாகனம் (vehicle)சிங்கம் ஆகும். இந்த வாகனம் துர்க்கை, காளி, மாரியம்மன் ஆகியோருக்கும் பாவிக்கப்படும். ஆண்கள் அனைவரும் மேலங்கி இன்றி செல்லும் நடைமுறையை கோவிலினுள்ளும் , கோவிலைச் சுற்றும் சாமி ஊர்வலத்தின் பின் செல்லும்போதும் பின்பற்றுவர். இறைவிக்கு மரியாதை செலுத்தும் முகமாகவே ஆண்கள் மேலங்கி இன்றி செல்லுவர். தைக்கப்பட்ட ஆடைகள் மாசுடையவை எனக் கருதப்படுவதனாலேயே சிலர் மேலங்கி இன்றி வேட்டி மாத்திரம் உடுத்து – உடலில் கீழ் பகுதியினை மறைத்து இடுப்பில் அணியப்படும் தைக்கப்படாத துணி, அணிந்து செல்வர்.
இந்த ஊர்வலத்தின் முன்னால் இரு நாதஸ்வர வாத்தியம் இசைப்பவர்கள் செல்வர். நாதஸ்வரமானது இந்து சமய சடங்குகளின் போது இலங்கையிலும் தென் இந்தியாவிலும் வாசிக்கப்படும் மங்கள வாத்தியக் குடம்பத்தைச் சேர்ந்த ஒன்றாகும். இது திடமான மரத்தில் இரு ஊது குழல்களுடனும் அகன்று விரிந்த ஒரு முன் பகுதியினுடனும் அடிப்பகுதியில் உலோகப் பாகத்தினையும் கொண்டு செய்யப்பட்டுள்ளது.இது பொதுவாக இருவர் வாசிக்கும் வாத்தியமாகும். உலகிலேயே பித்தளையால் செய்யப்படாத மிக சத்தமான காற்று இசைக்கருவி இது எனக் கருதப்படுகிறது.
தவில் பலாமரத்தில் (Artocarpus heterophyllus) குடைந்து எடுக்கப்பட்ட பீப்பா போன்ற அமைப்பினைக் கொண்டது. ஆட்டுத் தோலினால் மூடப்பட்ட தவில் நாதஸ்வரத்தின் பக்க வாத்தியமாகும். இதன் பெரிய தட்டும் முகம் மணிக்கட்டினாலும் விரல்களாலும் தட்டப்படும்.சிறிய தட்டும் முகமோ பூவரசம் மரத்தில் (Thespesia populnea) இருந்து செய்யப்பட்ட கட்டையான கெட்டியான தடியினால் அடிக்கப்படும். வசிப்பவர் விரல்களுக்கு அரிசி அல்லது கோதுமை மாப்பசையினால் இறுக்கமாகச் செய்த மூடிகளை அணிவர்.
கண்ணகி அம்மன் கோவிலில் மட்டுமன்றி இலங்கையிலுள்ள வேறு தெய்வங்களின் பல சடங்குகள் ஊர்வலங்களில்நாதஸ்வரமும் தவிலும் பிரதான அங்கம் வகிக்கின்றன.
கோவிலைச் சுற்றி மெதுவாக ஊர்வலம் செல்லும்போது பல பெண்கள் கற்பூரச் சட்டி ஏந்தி செல்வர் – வேப்பம் இலைகளாலான (Azadirachta indica)படுக்கையின் மேல் மண் சட்டியில் கற்பூரம் எரியும்.
ஊர்வலத்தை தொடர்ந்த சில பெண்கள் தாளஒலிக்கேற்ப (clash cymbals) கண்ணகி அம்மனைப் போற்றி பஜனைப் பாடல்கள் (chanting religious verses) பாடிச் சென்றனர். குழுவின் தலைவர் முதலில் பாடல் வரிகளைப் பாட ஏனையோர் அதனைப் பின் தொடர்ந்து பாடினர்.
இந்த மனிதன் ஒரு அதீத பக்தர். எரியும் தணலில் இருந்து சாம்பலை உடலில் பூசிய பின்னர், நிலத்தில் உருண்டு, தெய்வ உரு முன் குத்துக்கரணம் அடித்து, அரோகரா (எல்லாம் வல்ல இறைவனே) எனக் கூவியபடி, தன்னை ஒரு நெளிந்த இரும்புக் கம்பியினால் அடித்துக்கொண்டார்.
பங்குனியின் கடைசித் திங்களில், பக்தர்கள் தூக்குக் காவடி போன்ற மேலும் தீவிரமான நேர்த்திக்கடன்களை மேற்கொள்வர். உதாரணமாக பின் தரப்பட்டவற்றைப் பார்க்கவும்: http://www.youtube.com/watch?v=-pteF2_PZuw and http://www.youtube.com/watch?v=hhH3pXBuh3I
தூக்கு என்பது தொங்குதல் எனப் பொருள்படும். இதில் பல வகைகளுண்டு – ட்ரக்டரில் அமைக்கப்பட்ட மர மேடையில் இருந்து தொங்குவது தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் இரு வகைகள் இங்கே தரப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.(முதுகில் ஒன்று அல்லது இரண்டு கொழுக்கிகளைக் குத்தி நிலைக்குத்தாக தொங்குதல் – துலா அல்லது தூக்கில் பறவை போன்று கிடையாகத் தொங்குதல்) இவ் வகை பக்தி முறைகள் வற்றாப்பளையும் எல்லோருக்கும் அம்மன்! என்ற புகைப்படக் கட்டுரையில் மேலும் விளக்கப்படும்.